ஒவ்வொரு இரவுகளில் விருட்சங்கள்
வேரூன்றி நிற்கின்றன-
கூர்மையான முட்களால்
மிரட்டும் கிளைகள்...
முட்களின் முனைகளில்
சொட்டும் உதிரம்.
கதறல்களாய்
இலைகளின் இறைச்சல்
நீருக்கு பதிலாய்
தாய்மண்ணின் இரத்தம்
சுரண்டும் வேர்கள்-
கனிந்த கனிகளும்
விட்டுச் செல்வது
விசம் நிறைந்த விதைகளை-
வக்கிரம்
வன்முறை
வாழ்வின் இயலாமைகள்
ஒவ்வொரு இரவுகளில்
விருட்சங்களாய்
முளைத்து விடுகின்றன கனவுக் காடுகளில்...........
No comments:
Post a Comment