Tuesday, 10 September 2013

ஒரு மழை இரவு

                      

தேநீர்க் கடைகளில்
நாய்களுக்கும் மனிதனுக்கும்
சமத்துவ தஞ்சம்
-------------------------------------------------------------
கூரை கிழிசல் வழி
ஒழுகும் நீரை
தடுத்துக்கொண்டிருக்கும்
குழந்தையின் கல்சிலேட்டு..........
----------------------------------------------------------
மின்னல்களை படமெடுத்து
பதித்து வைத்திருக்கும்
சுவரின் வெடிப்புகள்...........
---------------------------------------------------------
ஏற்றப்பட்ட விளக்கில்
வந்து மடியும்
விட்டில்களில்
கணக்கு பயிலும் குழந்தை................
------------------------------------------------------------.



நிசப்தம் கலைத்து
சாரல்களாய்
பொழிந்துக்கொண்டிருக்கும்       
சுவர்க்கோழி சத்தம்
----------------------------------------------------
தலையணையில்
உயிர்த் துடித்து வெளிப்படும்
விசும்பல்கள்
கடல் சென்ற கணவன்.............
-------------------------------------------------
சாளரத்தின் வழியே
நிலவு நட்சத்திரங்களுடன்
சேர்ந்து காணாமல்
போயிருக்கும்
 நம்பிக்கைகள்....................
-------------------------------------------------
யுகங்களாய் கடரும்
கடலோரங்களில்
ஒரு மழை இரவு...................
                              


No comments:

Post a Comment